மின்சாரத் துறை சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
சிறிலங்கா நாடாளுமன்றில் முன்மொழியப்பட்ட மின்சாரத் துறை சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலத்திற்கு நேற்று (20) பிற்பகல் கூடிய அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய மின்சாரச் சட்டம்
இதனடிப்படையில், புதிய சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
இதேவேளை நாடாளுமன்ற அனுமதியைப் பெற்ற பின்னர், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு, செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்த புதிய மின்சாரச் சட்டம் திட்டமிட்டுள்ளது.
புதிய சட்டம் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தனியார் துறை பங்களிப்பையும் அனுமதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
The Cabinet of Ministers approved the proposed Electricity sector reforms bill today. Accordingly the new bill will be gazetted and presented in Parliament for approval.
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 20, 2023
Once approved by the Parliament the new Electricity Act will enable the unbundling of CEB services,…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |