உண்மையை மறைப்பதும் குற்றம்! மைத்திரியை சாடும் மகிந்த
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு தெரிந்த உண்மையை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னாள் அதிபரும் மொட்டு கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காது மைத்திரிபால சிறிசேன உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அத்துடன், தெரிந்த உண்மையை உண்மையை மறைப்பதும் ஒருவகையில் குற்றமென கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவின் கருத்து
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மைத்திரிபால சிறிசேனவின் கருத்து பாரதூரமானது.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும்.
நீதிமன்ற அழைப்பு
நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த தாக்குதல் தொடர்பான உண்மையை மறைப்பது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |