நீர்ச்சறுக்கலுக்கு சிறந்த இடம் : இலங்கையை புகழ்ந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்
இலங்கை நீர்ச்சறுக்கலுக்கு சிறந்த இடமாக திகழ்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நான் கலிபோர்னியாவில் பிறந்த பெண்ணாக இருந்தாலும், நான் இதற்கு முன்னர் ஒருபோதும் நீர்ச்சறுக்கல் விளையாடியதில்லை.
நீர்ச்சறுக்கல் விளையாட்டிற்கு சிறந்த இடம்
ஆனால் எனது பயத்தை ஓரங்கட்டி கடைசியாக இலங்கையில் நீர்ச்சறுக்கல் செய்தேன். எனக்கு பொறுமையுடன் பயிற்றுவித்தவருக்கு நன்றி.
Despite being a California girl, I had never tried surfing before but I overcame my fears & finally got on a board in Sri Lanka, thanks to a patient teacher. Can’t wait to return as a tourist for more lessons! Lanka’s southern coast is the best pic.twitter.com/DJTUinEsx2
— Julie Chung (@juliechungfso) January 12, 2026
ஒரு தூதுவராக மட்டுமல்லாமல், மீண்டும் ஒரு சுற்றுலாப் பயணியாக இலங்கை வந்து மேலும் பயிற்சிகளைப் பெற விரும்புகிறேன்.
இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதி (Southern Coast) நீர்ச்சறுக்கல் விளையாட்டிற்கு உலகின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாகும்”என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கின் இந்த அனுபவ பகிர்வு இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் குறிப்பாக தென்னிலங்கை கடற்கரைகளுக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |