சிங்கள மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரி ஏய்ப்பு அம்பலம் - வெளியானது பெயர்ப்பட்டியல்!
Parliament of Sri Lanka
Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 101 பேர் சிறப்பு உரிமையை பயன்படுத்தி அதிசொகுசு வாகனங்களை விற்பனை செய்துள்ள தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு வாகன கொள்வனவில் ஈடுபட்டிருந்தவர்களின் பெயர்ப் பட்டியலும் வெளியாகியுள்ளது.
2016ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டுகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமை அடிப்படையில், வாகனம் இறக்குமதி செய்து விற்பனை செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பில் வாகன இறக்குமதி
அதில் 82 சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள், 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 101 பேர், தங்களுடைய சிறப்புரிமையை பயன்படுத்தி, வரி ஏய்ப்பு செய்து, வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்துள்ளார்கள் என வெளியாகியுள்ள பெயர்ப் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.






அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி