வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டை : தலைமை பௌத்த பிக்கு கைது
Galle
Sri Lanka Police Investigation
Crime
By Raghav
காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் உள்ள பௌத்த துறவி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டிலேயே 81 வயதான குறித்த துறவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
தலைமை மதகுருவாக பணியாற்றும் இந்த துறவி, 41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சுற்றுலாப் பயணி, இந்த சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா காவல்துறையிடம் முறையிட்டதை அடுத்தே பௌத்த துறவி கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேறகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி