முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்கு வீதம்
புதிய இணைப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) தேர்தல் மாவட்டத்தில் 64.09 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இன்று இடம்பெற்ற நிறைவடைநதிருந்தது.
இதனைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையம் காணப்படும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 3947 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர், இந்நிலையில் இன்று 82942 பேர் வாக்களிக்க இருந்தனர்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.
வாக்கு பதிவுகள் இன்றையதினம் (14.11.2024) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மக்கள் உற்சாகமாக புதிய தலைவர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் . வாக்களிக்க தகுதிபெற்ற 86869 பேர் இன்றையதினம் வாக்களிக்க உள்ளனர்.
அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், 500 காவல்துறை உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றதுடன் தேர்தல் கடமையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
வவுனியா
வவுனியாவில் காலை10மணி வரை 25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் காலை முதல்மக்கள் ஆர்வத்துடன் தமது ஜனநாயக கடமையினை ஆற்றிவருவதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் இதுவரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எவையும் இன்றி சுமூகமான முறையில் வாக்களிப்பு செயற்ப்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.
இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. மாலை6 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |