நுவரெலியாவில் பதிவான மொத்த வாக்கு வீதம் !
புதிய இணைப்பு
நுவரெலியாவில் 70% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று மாலை நான்கு மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் 534 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் நிலையமான நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
வாக்கு எண்ணும் நிலையங்கள்
மேலும், 65 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜமாலை 04.00 மணி வரை வாக்களிப்பு சுமூகமாக இடம் பெற்றதோடு, 70% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 308 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதோடு, 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்றைய (14.11.2024) தினம் பரபரப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மலையகத்திலும் பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்தி வருவதாக எமது செய்தியளார் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா - மஸ்கெலியா (Maskeliya) தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்காளர்கள்
கொத்மலை (Kotmale) தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 65 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகள்
வாக்களிப்பு நிலையங்களில் 10000 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 2500 காவல்துறையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |