இலங்கைக்கான அமெரிக்காவின் நற்செய்தி: வெளியிடப்பட்ட அறிவிப்பு
அறுகம் குடா சுற்றுலா பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் அறுகம் குடா பகுதியில் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதன் போது இஸ்ரேலியர்கள் குறிவைக்கப்படலாம் என்றும் உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் ஒக்டோபர் 23 அன்று அமெரிக்க தூதரகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.
எவ்வாறாயினும், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
விசாரணை
அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகம் சுற்றித்திரிவதாகவும் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் எனவும் தமக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா 23 ஆம் திகதி தெரிவித்தார்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |