பாதாள உலகக்கும்பல்களுடன் தொடர்புடைய காவல்துறையினர்: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை
பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டுள்ள காவல்துறையினரை கண்டறிவதற்காக விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், விசேட விசாரணைகளை காவல் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்த கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த உள்ளிட்ட பாதாள உலகக்கும்பல் தலைவர்களை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இரகசிய நகர்வு தொடர்பான தகவல் கசிந்துள்ளமை காரணமாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசேட விசாரணை
குறித்த இரகசிய செயற்பாட்டுக்காக காவல்துறை அதிகாரிகள் தனித்தனியாக வேறு நாடுகளின் ஊடாகவே இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
எனினும் காவல் திணைக்களத்தின் ஊடாக ஏதோ ஒரு வழியில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டவர்களுக்கு தகவல் கசிந்தமை காரணமாகவே அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை மாற்றி தலைமறைவாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
பாதாள உலகக்கும்பல்
இந்தநிலையில் காவல் திணைக்களத்தின் தகவல்களை இவ்வாறு பாதாள உலகக்கும்பல்களுக்கு வழங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் தற்போதைக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கும் காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் பதவியில் இருந்து இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

