மீண்டும் அதிபர் தேர்தலில் ரணில் : மகிந்தவின் இணக்கம் கிட்டுமா..!
எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் அதிபர் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அவர் மேலும் 5 வருடங்கள் அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும்.
மகிந்தவின் நிலைப்பாடு
இந்த நிலைப்பாட்டை மாற்றினால் அதிபரின் வேலைத்திட்டம் பாதியில் நிறுத்தப்படும். இதனால் நாட்டில் மீண்டும் நெருக்கடிகள் உருவாகலாம் எனவும் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த உறுதிமொழிக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உடன்பாடும் தேவை எனவும், அதற்கமைய யோசனையை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர்கள் குழுவும் யோசனை தெரிவித்துள்ளது.