துபாயில் உள்ள சந்தையில் சிறிலங்கா தயாரிப்புகள்
“Best of Sri Lanka” என்ற இலங்கை தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல், துபாயின் அல் பர்ஷாவில் உள்ள லுலு ஹைப்பர் சந்தையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் துபாயில் உள்ள இலங்கையின் தூதரகத்தின் துணைத் தூதுவர் அலெக்சி குணசேகர கலந்து கொண்டிருந்தார்.
இந்த சந்தைப்படுத்தல் நிகழ்வானது ஜூலை 13 முதல் 19 வரையான ஒரு வார காலப்பகுதிக்கு நிகழ இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
சிறிலங்காவின் தனித்துவமான சுவை, தரம் மற்றும் பாரம்பரிய கலாசாரத்தை அறிமுகப்படுத்துவதே இந்த சந்தைப்படுத்தலின் பிரதான நோக்கமாகும்.
மிகப்பெரிய சில்லறைச் சங்கிலி
அதனடிப்படையில் இந்தச் சந்தையில் தேங்காய் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், தின்பண்டங்கள் என இலங்கை தயாரிப்பு பொருட்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
லுலு ஹைப்பர் சந்தையானது துபாயில் 98 க்கும் அதிகமான கடைகளுடன் மத்திய கிழக்கின் மிகப்பெரிய சில்லறைச் சங்கிலிகளில் ஒன்றாகும்.
ஆகவே இந்நிகழ்வானது உலக நாடுகளில் இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு இருக்கும் மதிப்பை இன்னும் பல மடங்கு அதிகரித்து ஏற்றுமதி இறக்குமதியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.