ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு - 16 பிரகடனங்கள் வெளியீடு (படங்கள்)
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு மீறப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரியுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் வடக்கு கிழக்கு மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து “100 நாட்கள் செயல்முனைவாக” முன்னெடுக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 100 ஆவது நாளை தொட்டது.
இறுதி நாளான இன்று கிளிநொச்சி குமாரபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், போராட்டத்தின் கொள்கைகள் பற்றிய 16 பிரகடனங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” “நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ” “வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் ” “ 13 ஆவது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது ” “ பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்” “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்” நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத ஸ்தலங்களின் புனிதத்தினை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே எனப் பல கோரிக்கைகளுடன் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
