டெலிகொம் நிறுவனம் தனியாருக்கு - தெளிவுபடுத்திய அரசதரப்பு அறிக்கை..!
Sarath Weerasekara
Government Of Sri Lanka
By Dharu
சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா டெலிகொம் தனியார்மயப்படுத்தப்படுவதன் ஊடாக தேசிய பாதுகாப்பு தொடர்பில் உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகொம் நிறுவனம் தனியாருக்கு
அண்மை காலமாக சிறிலங்கா டெலிகொம் நிறுவனம் தனியாருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்