ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி
பங்களாதேஷுக்கு (Bangladesh) எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், 99 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம், தொடரை இலங்கை (Srilanka) அணி வெற்றி கொண்டுள்ளது.
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 124 ஓட்டங்களையும், அணித் தலைவர் சரித் அசலங்க 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பின்னர் 286 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.4 ஓவர்கள் நிறைவில் 186 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
