அரச தலைவர் மாளிகையில் தொங்கவிடப்பட்டுள்ள வாசகங்கள்(படங்கள்)
Colombo
Galle Face Protest
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
மக்களிடம் வீழ்ந்தது அரச தலைவர் மாளிகை
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரையும் பதவி விலக கோரி நேற்றையதினம் வீறு கொண்டெழுந்த மக்கள், படையினரின் தடையையும் மீறி அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் இல்லம் ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆடம்பரமான இந்த அரச தலைவர் மாளிகையை பார்வையிடவதற்காக பெருமளவான மக்கள் அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
தொங்கவிடப்பட்டுள்ள வாசகங்கள்
இதனையடுத்து “பொருட்களுக்கு சேதம் விளைவிக்காமல் எவ்வளவு வேண்டுமானாலும் சுற்றிப் பாருங்கள்.. “, இது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது, என அரச தலைவர் மாளிகையில் வாசகங்களை போராட்டக்காரர்கள் காட்சிப்படுத்தியுளனர்.
