ஐரோப்பிய நாடொன்றில் மக்களுக்கு திருப்பி வழங்கப்படவுள்ள அபராத பணம்!
ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் மக்களுக்கு அந்நாட்டு அரசானது மில்லியன் கணக்கான பணத்தை திருப்பி செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி, கொரோனா ஊரடங்கு நடைமுறையிலிருந்த 2 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகையும் மக்களுக்கு திருப்பி அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் Robert Golob தலைமையிலான கட்சி தங்களது தேர்தல் வாக்குறுதியாக இதை முன்வைத்திருந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு அபராத தொகை திருப்பி வழங்கப்பட உள்ளது.
முதல் கொரோனா ஊரடங்கு
ஸ்லோவேனியாவில் முதல் கொரோனா ஊரடங்கின் போது தேவாலயம் ஒன்றின் படியில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்ட ஒருவருக்கு 400 யூரோ அபராதமாக விதிக்கப்பட்டது.
குறித்த நபரின் புகைப்படம் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட, அந்த நபர் குறுகிய நாட்களில் பிரபலமானார். மட்டுமின்றி, அந்த சம்பவம் ஸ்லோவேனியா அரசாங்கத்தின் கடும்போக்கு நடவடிக்கையின் எடுத்துக்காட்டாகவும் அடையாளப்படுத்தப்பட்டது.
தற்போது அந்த நபர் தமக்கு விதிக்கப்பட்ட 400 யூரோ அபராதத்தை திரும்ப பெற இருக்கிறார். இவருடன், மேலும் 60,000 ஸ்லோவேனியா மக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்ப பெற இருக்கிறார்கள்.
ஸ்லோவேனியாவில் கொரோனா ஊரடங்கு நடைமுறையிலிருந்த சுமார் இரண்டாண்டு காலம் காவல்துறையினர் மொத்தமாக 6 மில்லியன் யூரோ வரையில் அபராதமாக வசூலித்துள்ளனர்.
அந்த மொத்த தொகையும் உரியவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட இருப்பதுடன், வழக்குகளும் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |