அதிபர் முன்வைக்கின்ற பாதீடு தொடர்பில் கட்சி சார்பில் ஆராயப்படும் : சாகர காரியவசம்
SLPP
Ranil Wickremesinghe
Sri Lanka
Sagara Kariyawasam
By Sathangani
பாதீட்டின் முன்மொழிவுகளை பரிசீலித்தன் பின்னர், அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், கட்சி ரீதியில் தீர்மானிக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், பத்தரமுல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டே இவ்வாறு தெரிவித்தார்.
பாதீடு தொடர்பில் ஆராயப்படும்
அதிபர் முன்வைக்கின்ற பாதீடு தொடர்பில், கட்சி சார்பில் ஆராயப்படும் இதேவேளை ஆளும் கட்சியாக இருப்பினும், அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டின், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல விடயங்களையும் கருத்திற்கொண்டு, அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி