பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்
Anuradhapura
Parliament of Sri Lanka
SLPP
Sri Lanka
By Sathangani
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச்.நந்தசேன (K. H. Nandasena) இன்று (04) காலை காலமானார்.
அவர் திடீர் சுகயீனம் காரணமாக 69 வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எச்.நந்தசேன பதவியா பிரதேச சபை மற்றும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராவார். அத்துடன் மாகாண அமைச்சுப் பதவியையும் அவர் வகித்துள்ளார்.
2020 நாடாளுமன்றத் தேர்தல்
2017 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி