பொதுத் தேர்தல் 2024: மொட்டுக் கட்சியின் வேட்புமனு தாக்கலுக்கான நேர்முகத் தேர்வு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் (SLPP) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நேர்க்காணலானது இன்று (05) அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியின் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக மாத்திரமே புதிய கூட்டணிகள் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மொட்டுக் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் புதிய கூட்டணிகளை உருவாக்கும் எண்ணம் இல்லையெனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுத் தயாரிக்கும் பணிகள் இந்த நாட்களில் இடம்பெற்று வருவதுடன், எதிர்வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் வேட்புமனுக்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, செயலாளர்கள் பிரச்சினை உள்ள 5 அரசியல் கட்சிகளை இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |