ஹெரோயின் கடத்திய மொட்டு கட்சியின் அரசியல்வாதி சிக்கினார்
உக்குவெல பிரதேச சபையின் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரும் இரண்டு பெண்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு மாத்தளை தலைமையக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை களுதாவள நரிகந்த பிரதேசத்தில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களும் கைது

பிரதேசசபை உறுப்பினரிடம் இருந்து 2600 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சந்தேகத்திற்குரிய பெண்களிடம் இருந்து 2500 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகள்

இதற்கு முன்னரும் இந்த பிரதேச சபை உறுப்பினர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், மேலும் திருட்டு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த உறுப்பினருக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.