மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் : வெளியாகியுள்ள தகவல்!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளராக நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னிலையாகும் வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர்
அத்துடன், கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ள நால்வரில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வலிமையான ஒருவரை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கட்சி அறிவிக்குமெனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.
தேர்தல்களில் வெற்றி
இலங்கையில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் வெற்றிகரமாக எதிர்நோக்குவதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அதில் சிறந்த வெற்றிகளை கட்சி பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
