வெளிநாடொன்றில் இலங்கையரை கடத்த முயன்று சிக்கிய மூன்று தமிழர்கள்!
கடந்த ஜூலை மாதத்தில் ஒரு இலங்கை பிரஜையை கடத்த ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில், ஒரு பெண் உட்பட மூவர் மலேசிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஜி. சாந்தியா தர்ஷினி (27), ஜனார்த்தனன் அப்புபிள்ளை (46) என்ற இரண்டு மலேசியர்களும் வ்தீவரன் பழனி என்ற இலங்கையருமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நீதிமன்றில் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் தமிழில் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் அதனை ஒப்புக் கொண்டதாகவும், வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
15 ஆண்டு சிறை
கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1 வழியாக இலங்கையர் ஒருவரை கடத்த ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்கள் மீது 2007 ஆம் ஆண்டு ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 26C இன் கீழ், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 15 ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.
மற்றுமொரு இலங்கையர்
மேலும், ஒரு தனித் வழக்கில், 21 வயதான இலங்கையைச் சேர்ந்த அந்தனி சுஜன் அந்தனி ரஞ்சன் மீது KLIA முனையம் வாயிலாக புலம்பெயர்ந்தோரை கடத்துவதற்கு வசதியாக வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், அவர் மீதும் அதே சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, RM500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 7 மணி நேரம் முன்
