தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையிலான சமூக ஊடக பதிவுகள் நீக்கப்படும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர்.
தேர்தல் சட்டங்களுக்கு எதிரான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் youtube, Facebook, Tiktok, instagram, Whatsapp உள்ளிட்ட சமூக ஊடகங்களின் அதிகாரிகளுடன், இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்