டீசலுக்கு பதிலாக தண்ணீர்!! அம்பலமான மோசடி
பண்டாரகம பகுதியில் டீசல் என்ற பெயரில் தண்ணீர் கொள்கலன்களை விற்று ஒருவர் மோசடி செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேக நபர் எரிபொருள் வரிசையில் நின்று கொண்டிருந்த இருவரை அணுகி இரகசியமாக பதுக்கி வைத்திருந்த எரிபொருளை கொள்வனவு செய்ய விரும்புகிறீர்களா என கேட்டுள்ளனர்.
பல நாட்களாக உணவு மற்றும் ஓய்வின்றி வரிசையில் நின்றிருந்ததால், குறித்த எரிபொருளை கொள்வனவு செய்ய அவர்கள் சம்மதித்துள்ளனர்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களிடம் 2 டீசல் கொள்கலன்களை 24,000 ரூபாவுக்கு விற்றுள்ளார்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட ஒருவரின் டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் அவர்களுக்கு டீசலுக்கு பதிலாக தண்ணீர் கொள்கலன்களை விற்பனை செய்திருப்பது அடையாளம் காணப்பட்டது.
மற்றைய டீசல் கொள்கலனையும் பரிசோதித்ததில், பாதிக்கப்பட்டவர்கள் அனைத்தும் தண்ணீர், டீசல் அல்ல என்று அடையாளம் கண்டனர்.
தங்களுக்கு தண்ணீர் விற்பனை செய்த சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முயற்சித்த போதிலும், பாதிக்கப்பட்டவர்களால் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சந்தேநபர் சிறிய லொறியில் தேம்பிலி விற்பனை செய்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
