இளவரசர் வில்லியம் முன் மயங்கி விழுந்த வீரர்கள்
வருடாந்திர ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையின் போது மூன்று வீரர்கள் நேற்றைய தினம்(10) இளவரசர் வில்லியம் முன் மயங்கி விழுந்ததாக பொக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வு மன்னரின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஜூன் மாதமும் நடத்தப்படும் வருடாந்திர இராணுவ அணிவகுப்பு ஆகும்.
இந்நிகழ்வில், லண்டனில் இதுவரை இல்லாத வெப்பமான காலநிலைக்கு மத்தியில் வேல்ஸ் இளவரசர் தனது முழு இராணுவ அலங்காரத்தில் வருகைதந்துள்ளார்.
வெப்பமான வானிலை எச்சரிக்கை
Temperatures have passed 30C in London today, overwhelming some soldiers who took part in a military parade alongside Prince Williamhttps://t.co/McrUFliY2F pic.twitter.com/KAYXloNTvV
— ITV News (@itvnews) June 10, 2023
பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெற்கு இங்கிலாந்துக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், சுமார் 30 டிகிரி செல்சியஸ் லண்டன் வெப்பத்தில் இராணுவ வீரர்கள் கம்பளி ஆடைகள் மற்றும் கரடி தோல் தொப்பிகளை அணிந்துள்ளனர்.
இதன்போது, தொடர்ந்து இசைக்கும் முயற்சியில் மயக்கமடைந்த ஒரு இராணுவ டிராம்போனிஸ்ட் மீண்டும் எழுந்தார். சிறிது நேரத்தில் மருத்துவர்கள் அவருக்கு உதவ விரைந்துள்ளனர்.
இந்நிகழ்வில், ஹவுஸ்ஹோல்ட் பிரிவின் 1,400 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் கிங்ஸ் ட்ரூப் ராயல் ஹார்ஸ் பீரங்கிகள் அணிவகுப்பில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சிப்பாய்க்கும் ஒரு பெரிய நன்றி
இதனைத்தொடர்ந்து, இளவரசர் வில்லியம் ஒரு ட்வீட்டில், "இன்று காலை மதிப்பாய்வில் பங்கேற்ற ஒவ்வொரு சிப்பாய்க்கும் ஒரு பெரிய நன்றி. கடினமான சூழ்நிலையில் நீங்கள் அனைவரும் நன்றாக வேலை செய்தீர்கள். நன்றி. என தெரிவித்துள்ளார்.
அத்துடன், மற்றொரு ட்வீட்டில், "இன்று மன்னரின் பிறந்தநாள் அணிவகுப்பின் கேணல் மதிப்பாய்வை நடத்துதல். இது போன்ற ஒரு நிகழ்வில் ஈடுபடும் கடின உழைப்பு மற்றும் தயாரிப்பு, குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது. " என்று தெரிவித்துள்ளார்.
A big thank you to every solider who took part in the Colonel’s Review this morning in the heat. Difficult conditions but you all did a really good job. Thank you. W
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) June 10, 2023
