மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள்! கேள்விகுறியாகியுள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு..
சிங்கள பேரினவாத அரசுகளுக்கு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு விருப்பமில்லை என தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியிருந்தால் தற்போது தமிழ் தேசிய பரப்பில் இத்தனை கட்சிகள், கூட்டணிகள், கூட்டமைப்புகள் உருவாகியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது என தமிழ் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த தர்சிகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்று ஒன்றரை மாதங்களே ஆகியுள்ள நிலையில், 76 பிரச்சினைகளுக்கும் இந்த குறுகிய காலத்தில் தீர்வு காண முடியாது என தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த சிறிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) நாட்டை முன்னேற்றும் என்ற நிலைப்பாடு மக்களிடையே காணப்படுகின்றது, எனினும் தமிழ் மக்களுக்கான தீர்வு அவர்களிடம் உள்ளதா? என்று ஊடகவியலாளர் சர்மிளா கேள்வியெழுப்பியுள்ளாார்.
ஐபிசி தமிழின் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |