தமிழர் அரசியல் பின்னடைவுக்கு தீர்வென்பது இளையோர் கைகளில்! பாஸ்கரன் கந்தையா நம்பிக்கை
தற்போதைய தமிழ் அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைக் களைந்து, புதிய மாற்றத்தை உருவாக்கப் புதிய இளைய தலைமுறை அரசியலுக்கு வருவது அவசியம் என கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''தமிழ் அரசியலில் பல தசாப்தங்களாக நீடிக்கும் உட்கட்சி முரண்பாடுகள் இனத்தையே பாரதூரமான நிலைக்குத் தள்ளியுள்ளன.
பாரம்பரிய தமிழ் அரசியல்
எனவே, பழைய அரசியல் பாதைகளில் பயணிக்காத புதிய இளைய தலைமுறையால் மட்டுமே புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க முடியும்.

சில வேளைகளில் தாயகத்தில் இயங்கும் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க வேண்டி வந்தாலும், சிங்கள அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது அவசியமாகிறது. ஆனால் தான் அரசியலுக்குள் வந்தால், அவர் தனித்துவமான ஓர் அரசியலையே முன்னெடுக்க முடியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் தேசிய மக்கள் சக்திக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.
பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சிகள் மீது ஏற்பட்ட வெறுப்பும், மக்களைச் சரியான முறையில் வழிநடத்தத் தவறியமையுமே இதற்குக் காரணமாகும்.
போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குள்ளேயே தமது மனநிலையை மாற்றிக்கொண்டுள்ள மக்கள், புதிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும், தமிழர்களின் பூர்வீக நிலம், உரிமைகள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் போன்ற விடயங்களில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து மக்கள் அவதானமாக உள்ளனர்.
வடக்கு-கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் சித்தாந்த அரசியலில் இருந்து வெளிவந்து, பௌத்த, பௌதிக நாடாகப் பிரகடனம் செய்வதே அவர்களின் கொள்கையாக இருப்பதால், ஆட்சிகள் மாறினாலும் இந்தத் தத்துவார்த்த அடிப்படை மாறப்போவதில்லை.
வடக்கு மாகாண சபைக்கு மக்கள் தம்மைத் தெரிவு செய்தால், மக்களுக்கு விசுவாசமாக இருப்பதுடன் இந்த மண்ணுக்காக உயிர்நீத்தவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
எனினும், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காகத் தமிழர் தரப்பு ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். தாயகத்தில் ஏற்பட்டுள்ள வேலையின்மை காரணமாக அதிகளவான இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இதனைத் தடுக்க வடக்கு-கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும். மேலும், புதிய முதலீடுகளை ஈர்த்து, வெளிநாட்டு நிறுவனங்களை வரவழைத்து, உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திப் பாரிய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
இதன்படி இளைய தலைமுறை அரசியலுக்கு வரும்போதே இவ்வாறான பொருளாதார மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |