மலையகத்தில் கம்பனிகளால் தொடரும் அடக்குமுறை! தாக்கப்பட்ட தொழிலாளியின் மகன்!

Sonnalum Kuttram
By Independent Writer May 15, 2026 12:23 PM GMT
Report
Courtesy: எஸ்.தியாகு

தொழிலாளியின் மகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான பெயோலமன்ட் குரூப் சென் மார்கிரட் டிவிசன் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (15.05.2026) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை (14.05.2026) ரூபராணி என்பவரின் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான ஆவணங்கள் தாமதமாகியிருந்தமை குறித்து அவரது மகன் சுப்பையா நிரோசன் (37), பெயோலமன்ட் பிரிவு காரியாலயத்திற்கு சென்று காரணம் குறித்து விசாரித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

இளைஞரை தாக்கியதாக குற்றச்சாட்டு

இதன்போது அங்கு வந்த தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் இணைந்து குறித்த இளைஞரை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் கம்பனிகளால் தொடரும் அடக்குமுறை! தாக்கப்பட்ட தொழிலாளியின் மகன்! | Son Of Worker Attacked By Plantation Manager

தன்னை முதலில் தோட்ட முகாமையாளர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கியதாகவும், கீழே விழுந்த பின்னர் உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர் இணைந்து காலால் உதைத்ததாகவும் பாதிக்கப்பட்ட சுப்பையா நிரோசன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காயமடைந்த அவரை தாயார் உடபுஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சம்பவம் தொடர்பில் உடபுஸ்ஸல்லாவ காவல் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தோட்ட முகாமையாளர் உள்ளிட்ட தரப்பினரும் தங்களது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து உடபுஸ்ஸல்லாவ காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கையிலும் குறைவடைந்த தங்க விலை : வெளியான அறிவிப்பு

இலங்கையிலும் குறைவடைந்த தங்க விலை : வெளியான அறிவிப்பு

நீதிமன்றத்தில் முன்னிலை

காயமடைந்த சுப்பையா நிரோசன் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மலையகத்தில் கம்பனிகளால் தொடரும் அடக்குமுறை! தாக்கப்பட்ட தொழிலாளியின் மகன்! | Son Of Worker Attacked By Plantation Manager

இதனிடையே தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவரில் இருவரை உடபுஸ்ஸல்லாவ காவல்துறையினர் கடந்த 14ஆம் திகதி மாலை கைது செய்தனர்.

அவர்கள் நேற்று (15.05.2026) வலப்பனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவர்களை பிணையில் செல்ல உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடபுஸ்ஸல்லாவ காவல்துறையினர்மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்காக இன்று (16.05.2026) கந்தப்பளை உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்ட கம்பனி காரியாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், நுவரெலியா மாவட்டம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் ஆதரவுடன் ஈழத்தில் இனப்படுகொலை : தமிழீழம் குறித்து வன்னி அரசு பகிரங்கம்

இந்தியாவின் ஆதரவுடன் ஈழத்தில் இனப்படுகொலை : தமிழீழம் குறித்து வன்னி அரசு பகிரங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026