வயதான தாயை வன்புணர்விற்கு உட்படுத்திய மகன் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
வயதான தாயை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மகன் ஒருவரை ரத்தோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மஹியங்கனையில் வசிக்கும் 74 வயதான வயோதிப தாயொருவர் அவரது 54 வயது மகனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹோட்டலில் வைத்து மகன் கைது

ரத்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு சொந்தமான ஹோட்டலில் வைத்து மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகனின் உடல் நிலையை பரிசோதிக்க சென்றவேளை

தாயார் காவல்துறையில் அளித்துள்ள முறைப்பாட்டில், தனது மகனின் உடல்நிலை குறித்து பரிசோதிக்க ஹோட்டலுக்குச் சென்றதாகவும், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.