மத்தியவங்கி ஆளுநரிடம் பகிரங்க மன்னிப்பு கோரும் ரணிலின் ஆலோசகர்
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Ranil Wickremesinghe
By Sumithiran
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தான் தெரிவித்த கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர விரும்புவதாகவும் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலாநிதி நந்தலால் வீரசிங்க பற்றி தாம் கூறிய கருத்து பொய்யானது எனவும் அதற்காக வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டி
மத்திய வங்கியின் ஆளுநர் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அதற்கான பிரசாரங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ஆஷு மாரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்