வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து - 23 வயது இளைஞன் உயிரிழப்பு
Sri Lankan Tamils
Sri Lanka
By Kiruththikan
எஹலியகொட, பன்னில பிரதேசத்தில் நேற்று (3) மாலை தன்சல் ஒன்றிற்கு அருகில் 23 வயதுடைய இளைஞரொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சூப் தன்சலுக்கு அருகாமையில் குறித்தசம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபரின் பணப்பையிலிருந்த பணம் தொலைந்து போனதையடுத்து அவருக்கும் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் சந்தேக நபருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து குறித்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்