கட்டுக்கடங்காத கனடா காட்டுத்தீ - தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்களின் செயல்!
Canada
South Africa
Wildfire
By Pakirathan
கனடாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் ஆடிப் பாடி தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
காட்டுத் தீயை விரைந்து கட்டுப்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து 200 வீரர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நடனம்
எட்மன்டன் (Edmonton) நகருக்கு வந்தடைந்த வீரர்கள், தங்களது உடைமைகளுடன் விமான நிலையத்திலேயே நடனமாடியுள்ளனர்.
தீயணைப்பு பணியில் களமிறங்குவதற்கு முன்பாக, தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதமாக, தென்னாப்பிரிக்க கொடிகளை ஏந்தியவாறு பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்