டி20 இல் உலக சாதனை படைத்த தென்னாபிரிக்க அணி!
Cricket
South Africa
By pavan
மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இதன்படி சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை எடுத்து புதிய உலக சாதனையை தென்னாபிரிக்கா படைத்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
புதிய உலக சாதனை
பின்னர், 259 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 18.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.
இந்த வெற்றியின் ஊடாக இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சாதனையை தென்னாபிரிக்க அணி படைத்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி