அதிரப் போகும் தென்னிலங்கை அரசியல்! விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை
Sri Lanka Parliament
Sri Lankan protests
May Day
By Kiruththikan
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் மூன்றாம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புக்களை பொதுமக்களிடம் அவர் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இது குறித்த பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.
குறித்த பதிவில் 'சம்பந்தப்பட்டவர்களும் கோரியவர்களும் மே 03ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்' எனப் பதிவிட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்