எலான்மஸ்க்கிற்கு மீண்டும் பின்னடைவு : வெடித்து சிதறியது ரொக்கெட்
United States of America
Elon Musk
By Sumithiran
உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சனிக்கிழமையன்று ஏவிய ஸ்டார்ஷிப் ரொக்கெட் வெடித்து சிதறி கடலுக்குள் வீழ்ந்ததால் மீண்டும் தோல்வியடைந்தது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டை 7 மாதங்களுக்குப் முன் நடத்திய முதல்கட்ட சோதனையின்போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று மீண்டும் ரொக்கெட்டை ஏவும் சோதனை நடைபெற்றது.
சற்றுநேரத்தில் வெடித்துச் சிதறி
டெக்சாசில் உள்ள போகோசிகா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் பூஸ்டர், விண்ணில் ஏவப்பட்ட சற்றுநேரத்தில் வெடித்துச் சிதறி, மெக்ஸிகோ வளைகுடாவில் விழுந்தது.
இதனால் ஸ்டார்ஷிப் விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஏவுகணை ஏவ முயற்சி செய்வோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி