அரசாங்கத்தினால் வழங்கப்படும் புதிய கொடுப்பனவு...! வெளியான அறிவிப்பு
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை வெளிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கை இன்று (28-01-2026) ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில், பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தக நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் (2025-12-05) திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025 என்ற வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டதுடன், அந்த நிவாரண நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி, மிகவும் செயற்திறனாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்காக (2025-12-20) திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025(i) என்ற சுற்றறிக்கை மற்றும் (2026-01-22) திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025(iii) என்ற சுற்றறிக்கை ஆகியவை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |