வட மாகாணத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

Jaffna Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Sathangani Jul 21, 2023 12:02 PM GMT
Report

வடக்கு மாகாணத்தின் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்தார்.

நேற்று(20) வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மகளிர் விவகார அமைச்சின் பதில் செயலாளர், அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்களின் நேரடிப் பங்குபற்றுதலுடன், சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணையவழியில் பங்குபற்றினர்.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு, அந்தந்த மாவட்டங்களில் காணப்படும் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

பல்வேறு பிரச்சினைகள்

வட மாகாணத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் | Special Discussion Protection Children And Women

போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், கைத்தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மீதான அதீத நாட்டம், இளவயது திருமணம், சிறுவர் பராமரிப்பின்மை, சிறுவர் இல்லங்களின் குறைபாடுகள், பாடசாலை இடைவிலகல், பெற்றோரின் முறையற்ற திருமணங்கள் முதலிய பல்வேறு பிரச்சினைகள் இதன்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களால் முன்வைக்கப்பட்டது.

இவற்றை விபரமாகக் கேட்டறிந்த ஆளுநர், மாணவர்கள் மற்றும் இளவயதினரின் பொழுது நல்ல வழிகளில் கழிவதற்கு ஏற்ற வழிவகைகளை மேற்கொள்ள பாடசாலைகளும், பிரதேச மற்றும் கிராமிய மட்ட அமைப்புக்களும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கினார்.

இது தொடர்பான வெவ்வேறு உத்தியோகத்தர்கள் அதாவது சராசரியாக ஒரு பிரதேசசெயலகத்திற்கு பதினொரு உத்தியோகத்தர்கள் என்ற அளவில் பணிபுரிகின்றார்கள், அவர்கள் குழுவாக இணைந்து செயற்படும்பொழுது இவை சம்மந்தமான பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

தீர்வுகாணும் வகையில்

வட மாகாணத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் | Special Discussion Protection Children And Women

பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னர் அவை பற்றி ஆராய முற்படாமல், பிரச்சினைகள் ஏற்படாமல் தடுத்து நிறுத்தும் வழிவகைகள் குறித்து ஆராயவேண்டும் என்றும், இவ்வாறான பிரச்சினைகளின் மூலகாரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகளிற்கு தினமும் ஒரு பாடம் ஒதுக்கப்படவேண்டும் என்றும், கிராம மட்டத்தில் விளையாட்டு, கலைச் செயற்பாடுகள் என்பவற்றில் இளையோரை அதிகளவில் ஈடுபடுத்தும் வகையில், பிரதேச செயலகங்களின் துறைசார் அலுவலர்கள், விளையாட்டுக் கழகங்கள், மகளிர் அமைப்புக்கள், கலைக்குழுக்கள் என்பனவற்றையும் இணைத்துச் செயற்பாடுகளை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

போதைப்பொருள் பாவனை

வட மாகாணத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் | Special Discussion Protection Children And Women

பாடசாலை அதிபர்களும் ஏனைய கல்விசார் உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்களுடன் தொடர்பில் இருந்து, போதைப்பொருள் பாவனை, உளவியல் சார்ந்த பிரச்சினைகள், பாடசாலை இடைவிலகல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், இப்பிரச்சினைகள் தொடர்பான தரவுகளை தமக்குக் காலத்துக்குக் காலம் உடனடியாக அனுப்பிவைக்குமாறும் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற கலந்துரையாடல்களை அடிக்கடி நடாத்த வேண்டுமென்றும், இனிவரும் காலங்களில் கிரமமாக நடாத்தி படிப்படியாக பிரச்சினைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது ஆளுநர் உறுதியளித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025