ஈரானில் அதிகரிக்கும் பதற்றம் - இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம்
ஈரானில் (Iran) உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் முதல் விமானம் இன்று (16.01.2026) வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் இருந்து டில்லிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நாடு தழுவிய போராட்டங்களை வன்முறையில் அடக்கி, போராட்டக்காரர்களைக் கொன்றால், இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியா ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
பணிகளை மேற்கொள்வதில் சிரமம்
ஈரானில் உள்ள இந்தியா்கள் அங்கிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக வெளியேற வேண்டுமென இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களுக்காக சிறப்பு விமானம் இன்று (16) இயக்கப்படுகிறது.

முதல்கட்டமாக ஈரானிலுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக அழைத்து வர கடும் சவாலுக்கு மத்தியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெஹ்ரானிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் மாணவர்கள் உள்பட சுமார் 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானில் இணையதளம் முடக்கம் உள்பட தொலைத்தொடர்பு வசதிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இந்தியர்களைத் தொடர்புகொண்டு அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |