நாட்டில் நிலவும் காலநிலை: மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Weather
Sri Lankan Schools
By Shadhu Shanker
நாட்டில் நிலவும் காலநிலையினால் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில், அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
வெப்பமான காலநிலை
மேலும், மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று முதல் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்