ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்
பாடசாலைகளில் பணியாற்றி அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆசிரியர் சேவை யாப்பிற்கு இணங்க, போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் நோக்கம்
ஜனாதிபதி அநுரவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன்போது, இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ பொறுப்பல்ல என்ற போதிலும், ஒரு தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளர்.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்த மிக நீண்ட கலந்துரையாடலில் இணைந்து கொண்ட ஜனாதிபதி, அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 6 மணி நேரம் முன்