தொடரும் நெருக்கடி - பொருளாதார நிபுணர் ஸ்வர்னிமிடம் தஞ்சமடைந்த அரசாங்கம்!
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kanna
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து 20 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச அபிவிருத்தி நிபுணராக அனுபவம் பெற்ற வளவாளர் டாக்டர் ஸ்வர்னிம் வக்லேவுடன்(Swarnim Wagle) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடல் 'இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது’ என்ற தலைப்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஸ்வர்னிம் வக்லே உலக வங்கி, கொழும்பு மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் மூத்த பொருளாதார நிபுணராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி