கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (09) கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் நாளைய தினம் (08) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகளில் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் விடுத்த கோரிக்கை
இதேவேளை நாளை (7) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்களால், மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |