பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்துச் சேவை
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
பயணிகளின் தேவையின் அடிப்படையில் நாளை (22)முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
போக்குவரத்து சேவை
இதற்கமைய நாளை முதல் நீண்ட தூர சேவைகளுக்காக 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சேவை
இந்த வேலைதிட்டத்திற்காக ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை பதில் காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பாதுகாப்புக்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்