விசேட வைத்திய நிபுணர் மஹேஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்ன (Maheshi Wijeratne) குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலை
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்தவதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை நேற்று (07) கைது செய்யப்பட்ட மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
