இலங்கை - இந்தியாவுக்கு இடையில் குறைந்த செலவில் விமான சேவை
Colombo
Madurai
By Vanan
இந்தியாவின் குறைந்த செலவுகொண்ட ஸ்பைஸ்ஜெட் இன்று(20) முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான சேவையை ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் மதுரையில் இருந்து இன்று புறப்பட்ட SG 003, இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
வாரந்தோறும் ஆறு விமான சேவை

இலங்கையின் கொழும்பிற்கும் மதுரைக்கும் இடையில் விமான சேவைகளை ஆரம்பிப்பதாக கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
அந்த வகையில் இந்த சேவைக்கான முற்பதிவுகள் இணைய வழியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் வாரந்தோறும் ஆறு முறை மதுரை - கொழும்புக்கு இடையில் விமான சேவை முன்னெடுக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது.
புதன்கிழமை தவிர வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் இந்த சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது