உடல் எடையினால் அவதிப்படுபவர்களா?.. வீட்டிலுள்ள இந்த பொருட்களைப் பயன்படுத்தி இலகுவாக குறைக்க முடியும்

Health Women Food Weight Loss Lifestyle Antioxidants Body Weight Phytonutrients
By Chanakyan Jan 08, 2022 06:39 AM GMT
Report

உடல் எடை பிரச்சினையால் தற்போது ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். இதற்காக வியர்வை சிந்தி உடல்பயிற்சிகளை மேற்கொள்வது -  சிகிச்சை பெறுவது - உணவைத் தவிர்ப்பது என பலவற்றையும் முயற்சி செய்கின்றனர். ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு சமையலறையில் உள்ள பொருட்களே போதுமானது என்பதை பலர் அறிவதில்லை.

ஆரோக்கியமானதும் - பக்க விளைவுகள் அற்றதுமான உடல் எடை இழப்புக்கு ஒரு சீரான உணவு முறை தொடர்புபட்டுள்ளது. பலவகையான மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படாமல் இந்திய மற்றும் இலங்கை உணவு முழுமையடைவதில்லை. இந்த மசாலாப் பொருட்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. 

மஞ்சள்

மஞ்சள் பக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) நமது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க உணவைத் தவிர்ப்பவர்கள் தங்களது அன்றாட உணவில் தாராளமாக மஞ்சளை சேர்க்கலாம். இது செரிமான அமைப்பை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை (கறுவா)

கேக் முதல் அசைவ உணவுகள் வரை இலவங்கப்பட்டை இல்லாத சமையலே இருக்க முடியாது. இந்த இலவங்கப்பட்டை உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலில் சேர்ந்திருக்கும், கொழுப்பு அடுக்குகளை கரைத்து எடை இழப்பிற்கு வழி வகை செய்கிறது.

தினமும் காலையில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது மற்றும் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. ஒரு இலவங்கப்பட்டை மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக அருந்தி வர, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

பெருஞ்சீரகம்

பொதுவாக சான்ஃப் என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகம் உணவுக்குப் பிறகு வாய் புத்துணர்ச்சியாகவும், செரிமானத்திற்காகவும் சாப்பிடுவார்கள். இந்த பெருஞ்சீரகம் பசியை அடக்க உதவுகிறது, இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தடுக்க முடியும். மேலும் பெருஞ்சீரகத்தை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடித்து வர தொப்பை குறையும். பெருஞ்சீரகத்தில் உள்ள விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் விட்டமின் டி ஆகியவை ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழி வகுக்கிறது.

சீரகம்

ஒரு டீஸ்பூன் சீரக விதைகளை ஒரே இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை அருந்தி வந்தால் விரைவில் எடை குறைவதை காண முடியும். சீரகமானது உடலிலுள்ள கொழுப்புகளை விரைவாக கரைக்கும் தன்மை உடையது என்பதால் உங்கள் அசைவ உணவுகள், ரொட்டி, சூப் மற்றும் பருப்பு வகைகளில் மஞ்சளுடன் சீரகத்தை சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லது.

வெந்தயம்

வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும். அதுவும் தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் ஒரே வாரத்தில் 3 கிலோ வரை தொப்பை குறைய உதவுகிறது. மேலும் வெந்தயம் உங்கள் உணவில் கொழுப்பு மற்றும் கலோரி உட்கொள்ளலை குறைக்க உதவும்.

ஏலக்காய்

ஏலக்காயில் உள்ள மெலடோனின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. அதிக வளர்சிதை மாற்ற விகிதம் உடலில் கொழுப்புகளை வேகமாக கரைக்கவும் அதிக ஆற்றலை வெளியிடவும் உதவுகிறது. நீங்கள் குடிக்கும் நீரில் இந்த ஏலக்காயை போட்டு கொள்ள வேண்டும். இந்த நீரையே தாகம் எடுக்கும் நேரங்களில் குடித்து வரவும். தொடர்ந்து குடித்து வர உடல் எடை குறைவதை விரைவாக காண முடியும்.

மிளகு

நெஞ்செரிச்சலை நீக்குவது முதல் உடல் எடையை குறைக்க உதவுவது வரை, கருப்பு மிளகு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கிரீன் டீயில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு - மூன்று முறை சாப்பிடலாம். கருப்பு மிளகில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ் (Phytonutrients) அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை வெகுவாக குறையும்.

இஞ்சி

இஞ்சியில் சளித்தொல்லை, இருமல், செரிமானம் இன்மை, எதிர்ப்புசக்தி அதிகரித்தல் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. அதிகாலை எழுந்தவுடன் இஞ்சி டீ குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பூண்டு

அதிக கலோரிகளை குறைக்க, பூண்டு பயன்படுத்த. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. தினமும் 2 அல்லது 3 பூண்டை காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் சாப்பிட்டு வர உடல் எடையில் ஏற்படும் மாற்றத்தை நன்றாக உணர்வீர்கள்.


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025