விடுதலைப்புலிகளுடனான பிளவு..! கருணா கூறும் காரணம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு வெளியே வர வேண்டும் என நான் எடுத்த முடிவு சரியானது என்று கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நான் தான் காட்டிக் கொடுத்தேன் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழினத்தின் துரோகி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ''தமிழினத்தின் துரோகி என தன்னை புலம்பெயர் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் அழைப்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நான் தான் அழித்தேன், நான் தான் காட்டிக் கொடுத்தேன் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம்.
அதாவது, அப்போதைய காலப்பகுதியில், நடந்த பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி முறையிலான தீர்வை பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது அதை நான் ஆதரித்தேன். ஆனால் இந்த விடயம் தவறான கண்ணோட்டத்தில் தலைவருடைய காதுகளுக்கு சென்றது.
அத்தோடு அந்த விடயத்தை பாரிய தவறாக என் மீது சுமத்தினார்கள். எனவே எனக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை ஆகையால் நான் அந்த போராட்டத்தில் இருந்து விலகிச் சென்றேன்.எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் விலகி சென்றதும் இயக்கத்தை காட்டிக்கொடுக்கும் செயலில் ஈடுபடவில்லை எனவும் தான் இந்தியாவிலேயே தாங்கியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |