வெகு சிறப்பாக இடம்பெற்ற கற்பகா அறநெறிப்பாடசாலையின் விளையாட்டு விழா - 2023 (படங்கள்)
Sri Lankan Tamils
Mullaitivu
Sri Lanka
By Kiruththikan
முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தி வெள்ளைப்பிள்ளையார் ஆலய கற்பகா அறநெறிப்பாடசாலையின் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலாச்சார விளையாட்டுப் போட்டி இன்று (01-05-2023) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் லண்டன் வோல்தம்ஸ்ரோ அருள்மிகு ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலயத் தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
குறித்த அறநெறிப்பாடசாலையானது லண்டன் வோல்தம்ஸ்ரோ அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதியுதவியுடன் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,
மேலும், கலாச்சார விளையாட்டுப் போட்டியினை நடாத்துவதற்கு நிதியுதவியினை வழங்கிய கற்பக விநாயகர் ஆலயத்தினருக்கு அறநெறிப்பாடசாலை சமூகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
கலாச்சார விளையாட்டுப் போட்டி படங்கள்









1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி