22வது திருத்தச்சட்டத்திற்கு சுதந்திரக்கட்சி ஆதரவு! மைத்திரி பகிரங்கம்
22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என முன்னாள் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பான இரண்டாம் முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் இந்த தீர்மானம் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையல்ல.22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் மக்கள் பக்கம் இருந்து பார்க்கும் போது சிறந்த திருத்தம் என்பதால், மக்கள் பக்கம் இருந்து நாங்கள் ஆதரித்து வாக்களிக்கப்போம்.
எழுத்துமூலமான அரசியலமைப்புச்சட்டம்
இலங்கை அரசியலமைப்புச்சட்டம் 20வது முறை திருத்தப்பட்டுள்ளதுடன் அவற்றில் அதிகமான திருத்தங்கள் மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அல்ல.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எழுத்துமூலமான அரசியலமைப்புச்சட்டம் இல்லாத போதிலும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அந்த நாடு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
