ஹரிணிக்கு ஆண் நண்பர்கள் இல்லை! பிமலுக்கு பெண் நண்பர்கள் இல்லை
பிரதமர் ஹரிணி அமரசூரிய பெண்கள் பாடசாலையில் படித்ததால் அவருக்கு ஆண் நண்பர்கள் இல்லை என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
மேலும், தான் முழுக்க முழுக்க ஆண்கள் பாடசாலைக்கு சென்றதால், பெண் நண்பர்கள் யாரும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிமல் ரத்நாயக்க
மேலும், இது இந்த நாட்டில் பலர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்றும், இதன் விளைவாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடத்தப்படும் பாடசாலைகளில் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
